சென்னை: தசரா பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டிணம், கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்கு இன்று (அக்.3) முதல் அக்.16ஆம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும் பொதுமக்கள் பண்டிகை முடிந்து திரும்புவதற்கு ஏதுவாக அக்.13 முதல் அக்.16 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துத்துக் கழகத்தில் இணையம் வழி சேவையான www.tnstc.in மற்றும் tnstc official app மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய பஸ்.. விபத்தில் ஒன்பது பேர் பலி
இதன் மூலம் மேற்படி குறிப்பிடப்பட்ட ஊர்களுக்கு செல்லவும் மற்றும் அங்கிருந்து திரும்பவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுவதன் மூலம் பயணிகளின் பயணம் எளிமையாக்கப் படுவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்