தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஐஎன்எஸ் பிரம்புத்திரா போர்க் கப்பல் தீ விபத்துக்கு என்ன காரணம்? இந்திய கடற்படை கூறுவது என்ன? - INS Brahmaputra war ship Fire - INS BRAHMAPUTRA WAR SHIP FIRE

மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா போர்க் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாலுமி காணாமல் போனதாக கூறப்படும் நிலையில் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Etv Bharat
INS Brahmaputra tilts after fire (IANS)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 7:47 AM IST

மும்பை: இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா போர்க் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஐஎன்எஸ் பிரமபுத்திரா போர்க் கப்பலில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்ட போது விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இதில் ஜூனியர் மாலுமி ஒருவர் காணாமல் போனதாகவும் அவரை தேடும் பணி நடந்து வருவதாகவும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தீ விபத்து காரணமாக கப்பல் ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு பின்னரும் அதனை நிமிர்த்த முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன மாலுமியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மற்ற மாலுமிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா போர்க்கப்பலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை.21) மாலை தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து கடற்படை தளத்தில் இருந்த மற்ற கப்பல்களின் உதவியுடன் திங்கட்கிழமை (ஜூலை.22) காலை தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.

பின்னர் தீயின் சேதத்தை அறிவதற்கான பணி மேற்கொள்ளப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் கப்பல் ஒரு பக்கமாக சாய்ந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் அதை நிலையாக நிறுத்த முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2000ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட ஐஎன்எஸ் பிரமபுத்திரா போர்க் கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்க் கப்பலாகும். இதில் 40 அதிகாரிகள் மற்றும் 330 மாலுமிகள் பணியில் உள்ளனர். 125 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில் மீடியம் ரேஞ், குளோஸ் ரேஞ், ஆன்டி-ஏர்கிராப்ட் துப்பாக்கிகள், நீரில் இருந்து ஏவுகணை செலுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும்.

மேலும், போர்க் காலங்களில் ஐஎன்எஸ் பிரமபுத்திரா போர்க் கப்பலில் இருந்து ஹெலிகாப்டர்களை இயக்க முடியும் என்பதல் வங்காள விரிகுடா பகுதியில் எப்போது தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்! நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா? - Union Budget 2024

ABOUT THE AUTHOR

...view details