டெல்லி :டெல்லியை சேர்ந்த எழுத்தாளர் சிவ் கேரா, உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், குறிப்பிட்ட தேர்தல் நடைபெறும் தொகுதியில் வேட்பாளர்களை காட்டிலும், நோட்டா அதிக வாக்குகளை பெற்றால் அந்த தேர்தலை ரத்து செய்து மீண்டும் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எழுத்தாளர் சிவ் கேரா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் குஜராத் மாநிலம் சூரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறங்கிய வேட்பாளர்களின் மனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்தார்.
அதைத் தொடர்ந்து மற்ற கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் வேறு வேட்பாளர்கள் இன்றி பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் அங்கு மக்கள் தங்களுக்கான தலைவரை தேர்தலில் தேர்ந்தெடுக்க திட்டமிட்டு இருந்த நிலையில் அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் தேர்தல்களில் மற்ற வேட்பாளர்களுக்கு இணையாக நோட்டாவையும் ஒரு வேட்பாளராக கருதி விளம்பரப்படுத்த வேண்டும், குறிப்பிட்ட தேர்தலில் ஒரு தொகுதியில் வேட்பாளர்களை காட்டிலும் நோட்டா அதிக வாக்குகளை பெற்றால் அந்த ரத்து செல்லாது என அறிவிக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும்.