தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'சிப்' நகராக மாறப்போகும் ஹைதராபாத்.. மின்னணுவியல் துறையில் குவியும் வேலைவாய்ப்பு! - hyderabad will be turned chip city - HYDERABAD WILL BE TURNED CHIP CITY

மொபைல் போன்கள் முதல் விண்ணில் ஏவப்படும் ராக்கெட்கள் வரை சிப்கள் உபயோகிக்கப்படும் சூழலில் உள்நாட்டில் சிப் தயாரிப்பை தொடங்குவதற்காக உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சிப் குறித்த ஆராய்ச்சிகள் தீவிரம் அடைந்துள்ளன. விரைவில் ஹைதராபாத் நகரம் சிப்கள் தயாரிப்புகளின் மையமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிப்(கோப்புப்படம்)
சிப்(கோப்புப்படம்) (image credits - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2024, 5:10 PM IST

ஹைதராபாத்: நாம் உபயோக்கும் செல்போன், ஸ்மார்ட் வாட்ச், டிவி, ரிமோட் கண்ட்ரோல், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள், கார்கள், விமானங்கள், ராக்கெட்கள் ஆகியவற்றில் சிப் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சிப்கள் இப்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக பல லட்சம் கோடி ரூபாய்கள் அன்னிய செலவானி செலவிடப்படுகிறது.

இந்த நிலையில்தான் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகம் ஏற்கனவே மென்பொருள் தொழில்துறையினருக்கான தீர்வை அளித்தது. இப்போது சிப் தொழில்நுட்பத்துக்கும் உரிய தீர்வை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திரசேகரின் வழிகாட்டுதலில் மின்னணுவியல் துறை ஆராய்ச்சி மாணவர்கள் நம்மிடம் உள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிப்களுக்கான அதிர்வெண் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கிய ஆராய்ச்சியில் 90 சதவிகிதம் முடிவடைந்து விட்டது. ஆராய்ச்சியைத் தொடர்ந்து சிப் உற்பத்தி செய்யும்பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அவர்கள் தயாரித்துள்ள ஆய்வறிக்கையில், ஒரு ஜிகாஹெர்ட்ஸ் திறனில் செயல்படும் 2 மில்லி மீட்டர் அளவுள்ளதாக சிப்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இதற்காக மத்திய அரசு ரூ.5 கோடியை தருவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க : இந்திய செமிகண்டக்டர் துறையில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள்! உலகின் சிப் மேக்கராக மாறுமா இந்தியா?

மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளில் மைக்ரோ சிப்கள் உபயோகிக்கப்படுகின்றன. சிப்கள் இல்லா விட்டால் இந்த துறைகள் செயல் இழந்து விடும். கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தின் போது பெரும்பாலான நாடுகளில் சிப்கள் இறக்குமதி செய்யப்படாததால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியா கடந்த 2022-23ஆம் ஆண்டில் மட்டும் ரூ.1,29,703 கோடி அளவுக்கு சிப்களை இறக்குமதி செய்துள்ளது. உலகின் சிப்களின் தேவையை தைவான் பூர்த்தி செய்கிறது. தைவானில் மட்டுமே ஒரு மில்லி மீட்டர் அளவுக்கு சிப்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே பெரும்பாலான நாடுகள் தைவானை நம்பியே உள்ளன. இந்தியா உட்பட சில நாடுகளில் 3 முதல் 5 மில்லி மீட்டர் அளவுள்ள சிப்கள் தயாரிக்கப்படுகின்றன.

இது குறித்து பேசியுள்ள உஸ்மானியா பொறியியல் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் சந்திரசேகர், "கொரோனா காலகட்டத்தின்போது எதிர்கொண்டது போன்ற பிரச்னையை இனி எதிர்கொள்ளக் கூடாது என்ற குறிக்கோளுடன் சிப்களுக்கான அதிர்வெண் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அவ்வாறு உருவாக்கப்படும்போது சிப்களுக்காக வெளிநாடுகளை சார்ந்திருப்பது குறையும். அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் சிப்கள் இறக்குமதி 20 சதவிகிதம் அளவுக்கு குறையும். இது இந்திய எலெக்ட்ரானிக்ஸ் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் முயற்சி. வணிக ரீதியிலான உற்பத்தி தொடங்கும் போது ஒவ்வொரு சிப் தயாரிக்கப்படுவதற்கான ராயல்டி தொகையை உஸ்மானியா பல்கலைக்கழகம் பெறும்" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details