திருவனந்தபுரம் :கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த கரக்கமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சமீரா. பாலக்காடை பூர்வீகமாக கொண்ட சமீரா, கணவர் நயாசுடன் கரக்கமண்டபம் பகுதியில் வசித்து வந்து உள்ளார். நிறைமாத கர்ப்பிணியான சமீராவை, கணவர் நயாஸ் மருத்துவமனையில் சேர்க்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
சமீராவை மருத்துவமனையில் அனுமதிக்கக் கோரி சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோர் எவ்வளவோ எடுத்து கூறியும் நயாஸ் அவற்றை புறந்தள்ளிவிட்டு அலட்சியமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பிரசவ வலியால் சமீரா துடிதுடித்து உள்ளார்.
இருப்பினும், சமீராவை நயாஸ் மருத்துவமனையில் அனுமதிக்காமல் வீட்டில் இருந்தே பிரசவம் பார்க்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதில் வலி தாங்க முடியாமல் சிறிதி நேரத்தில் சமீரா மயக்கமடைந்து உள்ளார். இதைக்கண்ட அருகில் உள்ளவர்கள் சமீராவை உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.