வாஷிங்டன்: பிரபல ஹாலிவுட் நடிகையும், பாப் பாடகியுமான செலினா கோம்ஸ் (32). அமெரிக்காவின் இளம் பெண் கோடீஸ்வரர் பட்டியலில் இணைந்துள்ளார். செலினா கோம்ஸ் நடிகை, பாப் பாடகி, தயாரிப்பாளர், தொழிலதிபர் என பன்முகம் கொண்டவர். இவருக்கு இன்ஸ்ட்டாகிராமில் 425 மில்லியன் பாலோவர்ஸ்களை பெற்றுள்ளார்.
இதன்மூலம் 400 மில்லியன் பாலோவர்ஸ்களை கொண்ட முதல் பெண் பிரபலம் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். இந்த நிலையில், அமரிக்காவின் இளம் பெண் கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் தற்போது செலினா கோம்ஸ் இணைந்துள்ளார். மேலும், இந்த வெற்றி இவரது முதன்மையான தொழிலாக பார்க்கப்படும் பாப் இசையின் மூலம் இல்லாமல் இவரது 'ரேர் பியூட்டி' என்ற ஒப்பனை மற்றும் அழகுசாதனப் பொருட்கள் நிறுவனத்தின் மூலமாக கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள இந்த நிறுவனத்தை செலினா கோம்ஸ் தான் நிறுவி நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் சுமார் 81.4 சதவீத வருமானத்தை செலினா கோம்ஸ் ஈட்டியுள்ளார். அதாவது, செலினா கோம்ஸின் தற்போதைய சொத்து மதிப்பான 1.3 பில்லியன் அமெரிக்க டாலரில் 81.4 சதவீதம் ரேர் பியூட்டி மூலமாகவே கிடைத்துள்ளது.