தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்! அமலாக்கத்துறை கைது எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு! என்ன திட்டம்? - Hemant soren released

சட்டவிரோத பணப்பரிவர்த்தணை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தற்காலிக ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், சொந்த ஊரில் தனது மாமாவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 6, 2024, 6:02 PM IST

டெல்லி:நில மோசடி விவகாரத்தில் கோடிக்கணக்கிலான ரூபாயை சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை செய்ததாக கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. நீதிமன்ற காவலில் சிறையில் இருக்கும் ஹேமந்த் சோரன் தன் மீதான அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் உள்ள நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஹேமந்த் சோரன் அபகரித்துக் கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த மனுவை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் கடந்த மே 3ஆம் தேதி நிராகரித்தது. இதையடுத்து ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

ஹேமந்த் சோரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மனுத் தாக்கல் செய்தார். மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் இந்த வழக்கை அவசர வழக்காக கருத்தில் கொண்டு விசாரிக்க வேண்டும் என கபில் சிபில் கேட்டுக் கொண்டார்.

மேலும், மே 13ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் பிரசாரம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கபில் சிபில் கேட்டுகொண்டார். இதையடுத்து, நீதிபதிகள் அமர்வு கபில் சிபலின் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும், இடைக்கால ஜாமீன் கோரிய மனுவை மே 7ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வது குறித்தும் தெரிவித்தனர்.

இதனிடையே மறைந்த தனது மாமாவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு ஹேமந்த் சோரன் தரப்பில் ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு தற்காலிக ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், தற்காலிக ஜாமீனில் வெளிவரும் ஹேமந்த் சோரன் பொது வெளியில் பேசவோ, பேட்டி அல்லது பிரசார விழாக்களில் பங்கேற்கவோ கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஒரு நாள் ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன், ராம்கர்க் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரில் நடந்த மாமாவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தொடர்ந்து குடும்ப உறுப்பினர்களை சந்தித்த ஹேமந்த் சோரன் அவர்களுடன் உரையாடினார். தொடர்ந்து கட்சி உறுப்பினர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் ஹேமந்த் சோரன் உரையாடினார்.

இதையும் படிங்க :இந்திய மாணவர் ஆஸ்திரேலியாவில் குத்திக் கொலை! சக இந்திய மாணவரால் நடந்த விபரீதம்! - Indian Student Killed In Australia

ABOUT THE AUTHOR

...view details