தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராமகிருஷ்ணா மிஷன் தலைவராக கவுதமனந்தாஜி மகாராஜ் தேர்வு! பிரதமர் மோடி வாழ்த்து! - Ramakrishna Math new president

17வது ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் தலைவராக கவுதமனந்தாஜி மகாராஜ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 6:13 PM IST

ஹவுரா :ராமகிருஷ்ணா மடம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷன் ஆகியவற்றின் தலைவராக கவுதமனந்தாஜி மகாராஜ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் மற்றும் ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக சுவாமி ஸ்மரணானந்தா மகராஜ் இருந்தார்.

95 வயதான ஸ்மரணானந்தா மகராஜ் கடந்த மார்ச் 26ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார். இதையடுத்டு ராமகிருஷ்ண மிஷன் மற்றும் ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக கவுதமனந்தாஜி மகாராஜ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

ராமகிருஷ்ண மடத்தின் அறங்காவலர் குழு மற்றும் நிர்வாகக் குழுவினர் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் தலைவராக கவுதமனந்தாஜி மகாராஜை தேர்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இன்று (ஏப்.24) முதல் ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷின் முழுநேர தலைவராக கவுதமனந்தாஜி மகாராஜ் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிதாக தேர்வு செய்யப்பட்டு உள்ள்ள கவுதமனந்தாஜி மகாராஜுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷனின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுவாமி கவுதமானந்தஜி மகராஜ்க்கு எனது மரியாதைகளும், நல்வாழ்த்துக்களும்.

சுவாமி கவுதமானந்தஜி மகராஜ் நமது சமுதாயத்தை அதிக ஞானத்திற்கும் கருணைக்கும் வழிகாட்டுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எண்ணற்ற இந்தியர்களின் வாழ்வில் ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் மிகவும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. ராமகிருஷ்ண பரமஹம்சர், மா சாரதா தேவி மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் கொள்கைகளை மேலும் பிரபலப்படுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை" என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.

ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் 16வது தலைவர் சுவாமி சமரானந்தா மகராஜ் மறைவுக்கு பிறகு 17வது தலைவராக சுவாமி கவுத்மானந்தாஜி மகாராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷனின் துணைத் தலைவர்களாக சுவாமி பிமலாத்மானந்தாஜி மகராஜ் மற்றும் சுவாமி திவானந்தஜி மகராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க :ஓய்ந்தது 2ம் கட்ட தேர்தல் பரப்புரை; 88 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு! - LOK SABHA ELECTION 2024

ABOUT THE AUTHOR

...view details