டெல்லி:ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் வித்தகராக விளங்கிய ராமோஜி குழுமத்தின் நிறுவனத் தலைவர் ராமோஜி ராவை கௌரவிக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் வியாழக்கிழமை (ஜூன்.20) இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
டெல்லி, ஜாண்டேவாலனில் உள்ள ஈடிவி பாரத் பணியக அலுவலகத்தில், ஈடிவி மற்றும் ஈடிவி பாரத்தின் செய்திப் பிரிவு, சந்தைப்படுத்தல், சட்டம் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் ராமோஜி ராவுக்கு அஞ்சலி செலுத்தினர். டெல்லி கிளைத் தலைவர் குல்ஷன் திங்ரா தலைமையில் அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர், ராமோஜி ராவின் வாழ்க்கை வரலாறு ஆடியோ-வீடியோ விளக்கக்காட்சியாக ஒளிபரப்பப்பட்டது. எளிமையான குடும்பத்தில் இருந்து வந்து ஒரு பரந்த ஊடக சாம்ராஜ்யத்தை நிறுவுவதற்கான அவரது பயணத்தை வீடியோவில் கூறப்பட்டு இருந்தது. அச்சு, பொழுதுபோக்கு, டிவி மற்றும் டிஜிட்டல் மீடியாவில் அவர் ஆற்றிய பணிகள் குறித்து வீடியோவில் கூறப்பட்டது.
உலகின் மிகப்பெரிய திரைப்பட ஸ்டுடியோ வளாகமாக கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ராமோஜி பிலிம் சிட்டியின் முக்கியத்துவத்தை வீடியோவில் எடுத்துக் கூறப்பட்டு இருந்தது. 29 மாநிலங்களில் 12 பிராந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் செய்திகளை வழங்கும் டிஜிட்டல் செய்தி தளமாக ஈடிவி பரத்தின் பங்கை இந்த வீடியோவில் கூறப்பட்டது. \
அதேபோல் ஈடிவி குழும நிறுவனர் பத்ம விபூஷன் ராமோஜி ராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இரங்கல் கூட்டத்தை ஏற்பாடு செய்தனர். நிகழ்ச்சியில், ஈடிவி பாரத் ஒடிசா நிருபர்கள் மற்றும் பணியகத் தலைவர் விஸ்வநாத் பிரஹராஜ் ராஜ்குரு உள்ளிட்டோர், மறைந்த ராமோஜி ராவுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை உள்பட நாட்டிற்கும் சமூகத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்ந்தனர். ஈடிவி பாரத் ஒடிசாவின் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு மறைந்த ராமோஜி ராவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க:"முறைகேடு உறுதியானால் நீட் தேர்வு ரத்து" - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்! - Dharmendra Pradhan press meet