விசாகப்பட்டினம்:சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவில் இருந்து ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு வந்த கோர்பா எக்ஸ்பிரஸ், ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ரயிலின் 3 ஏசி பெட்டிகள் எரிந்து நாசமானது.
கோர்பாவில் இருந்து கிளம்பிய கோர்பா - விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ், இன்று காலை 6 மணியளவில் விசாகப்பட்டினம் வந்தடைந்துள்ளது. மேலும், 10 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நான்கு தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், இந்த விபத்தின் போது ரயில் பெட்டிக்குள் யாரும் இல்லாததால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்து மின்னழுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், தீ விபத்து குறித்து ரயில்வே ஊழியர்கள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அயோத்தி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை; 'டிஎன்ஏ டெஸ்ட் தேவை'.. அகிலேஷ் யாதவ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை! - Ayodhya Sexual harassment case