கொச்சி :காங்கிரஸ் தலைவர், முன்னாள் கேரளா முதலமைச்சர் கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால் விரைவில் பாஜகவில் இணைய திட்டுமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் ஒரே மேடையில் பத்மஜா வேணுகோபால் தோன்ற வாய்ப்புகள் உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
எதிர்வரும் மக்களவை தேர்தலில் பாஜக தரப்பில் போட்டியிட பதம்ஜா வேணுகோபாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் தேசியத் தலைவர்களின் தொடர் புறக்கணிப்பு காரணமாக பத்மஜா வேணுகோபால் இந்த முடிவை எடுத்து உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
கேரளாவில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தனக்கு வழங்கப்படும் என எதிர்பார்த்து காத்திருத்த பத்மஜான் வேணுகோபால், காங்கிரஸ் கட்சி தனது கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு அந்த இடத்தை ஒதுக்கியதால் ஏமாற்றம் அடைந்ததாக தகவல் கூறப்பட்டு உள்ளது. மக்களவை உறுப்பினர் வடகரா கே. முரளிதரனின் சகோதரியான பத்மஜா வேணுகோபால், இதற்கு முன்னதாக கேரளா சுற்றுலாத்துறை மேம்பாட்டு கழகத்தின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.