தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரூ.4,650 கோடி பணம், ரூ.2,068 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் - தேர்தல் ஆணையம்! தமிழகத்தில் எவ்வளவு? - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

முதற்கட்ட நாடாளுமன்ற தேர்தல் தொடங்க இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் நாடு முழுவதும் ஏறத்தாழ 4 ஆயிரத்து 650 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 4:38 PM IST

Updated : Apr 16, 2024, 12:11 PM IST

டெல்லி : நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகின்றன. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்க உள்ள நிலையில், ஜூன் 1ஆம் தேதி 7வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், மக்களவை தேர்தல் பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

முதல் கட்ட மக்களவை தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், நாடு முழுவதும் 4 ஆயிரத்து 650 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு 3 ஆயிரத்து 475 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், நடப்பாண்டில் அதிகளவில் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியாக கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் போதைப் பொருள் பறிமுதலில் குஜராத் முதலிடத்தில் உள்ளதாகவும், ஒட்டுமொத்த அளவில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ராஜஸ்தானில் இதுவரை 778 கோடியே 52 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து குஜராத்தில் 605 கோடியே 35 லட்ச ரூபாயும், 3வது இடத்தில் தமிழ் நாட்டில் 460 கோடியே 84 லட்ச ரூபாயும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மகாராஷ்டிராவில் 431 கோடியே 34 லட்ச ரூபாய், பஞ்சாப்பில் 311 கோடியே 84 லட்ச ரூபாய், டெல்லியில் 236 கோடியே 6 லட்ச ரூபாய் என கைப்பற்றப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போதைப் பொருள் பறிமுதலை பொறுத்தவரை குஜராத்தில் 485 கோடியே 99 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் 239 கோடியே 2 லட்ச ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. பஞ்சாப்பில் 280 கோடியே 21 லட்ச ரூபாய், டெல்லியில் 189 கோடியே 94 லட்ச ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ஒட்டுமொத்தமாக நாடு முழுவது 2 ஆயிரத்து 68 கோடியே 85 லட்ச ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதேபோல் 489 கோடியே 31 லட்ச ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதில் அதிகபட்சமாக கர்நாட்காவில் 124 கோடியே 33 லட்ச ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

அதுபோக 395 கோடியே 93 லட்ச ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 53 கோடியே 58 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :அரவிந்த் கெஜ்ரிவால் காவல் மீண்டும் நீட்டிப்பு! மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு! - Delhi Excise Policy Case

Last Updated : Apr 16, 2024, 12:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details