தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"சோன்மார்க்கில் சுரங்கப்பாதை திறப்பு விழாவுக்கு ஆவலுடன் காத்திருக்கின்றேன்"-பிரதமர் நரேந்திர மோடி! - AWAITING MY VISIT TO SONMARG PM

சுரங்கப்பாதை 6.4 கிலோமீட்டர் நீளம் கொண்டது, இது பிரபலமான சுற்றுலா தலமான சோனாமார்க்கை மத்திய காஷ்மீரின் காண்டர்பால் மாவட்டத்தில் உள்ள கங்கன் நகரத்துடன் இணைக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி திறக்க உள்ள சுரங்க பாதை
பிரதமர் நரேந்திர மோடி திறக்க உள்ள சுரங்க பாதை (Image credits-APCO)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2025, 12:46 PM IST

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 13 ஆம் தேதி ஜம்மு & காஷ்மீரில் உள்ள சோனாமார்க் செல்கிறார். காலை 11:45 மணியளவில், அவர் சோனாமார்க் சுரங்கப்பாதையை பார்வையிடுவார், அதைத் தொடர்ந்து அதன் திறப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

சுமார் 12 கிமீ நீளமுள்ள சோனாமார்க் சுரங்கப்பாதை திட்டம் ரூ.2,700 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இது 6.4 கிலோ மீட்டர் நீளமுள்ள சோனாமார்க் பிரதான சுரங்கப்பாதை, வெளியேறும் சுரங்கப்பாதை மற்றும் அணுகுமுறை சாலைகளை உள்ளடக்கியது.

கடல் மட்டத்திலிருந்து 8,650 அடி உயரத்தில் அமைந்துள்ள இது, ஸ்ரீநகர் மற்றும் சோனாமார்க் இடையே லே வரை செல்லும் வகையில் குளிர்காலம், மழைகாலம், கோடைகாலம் என அனைத்து வானிலைக்கும் ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நிலச்சரிவு மற்றும் பனிச்சரிவு வழிகளைத் தவிர்த்து, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த லடாக் பகுதிக்கு பாதுகாப்பான மற்றும் தடையின்றி பயணம் மேற்கொள்வதை இந்த சுரங்கப்பாதை உறுதி செய்யும். இது சோனாமார்க்கு ஆண்டு முழுவதும் பயணிகள் செல்லக்கூடிய வகையிலான பாதையாக இருக்கும். குளிர்கால சுற்றுலா, சாகச விளையாட்டுகள் மற்றும் உள்ளூர் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்தவும் இந்த சுரங்கபாதை உதவும். .

2028-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படவுள்ள ஜோஜிலா சுரங்கப்பாதையுடன், இது பாதையின் நீளத்தை 49 கிமீ முதல் 43 கிமீ வரை குறைத்து, வாகனத்தின் வேகத்தை மணிக்கு 30 கிமீ முதல் 70 கிமீ வரை அதிகரிக்கும், ஸ்ரீநகர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் இடையே தடையற்ற தேசிய நெடுஞ்சாலை -1 இணைப்பை உறுதி செய்யும். . இந்த மேம்படுத்தப்பட்ட இணைப்பு ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் முழுவதும் பாதுகாப்பு தளவாடங்கள், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக-கலாச்சார ஒருங்கிணைப்பை அதிகரிக்கும்.

இந்த பயணத்தின் போது இந்தப் பொறியியல் சாதனையில் ஈடுபட்டுள்ள கட்டுமானத் தொழிலாளர்களையும் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளார்.இந்த நிலையில் மேற்கண்ட சுரங்கப்பாதை திறப்புவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா வெளியிட்ட சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோன்மார்க்கில் சுரங்கப்பாதை திறப்பு விழாவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதாரத்திற்கான நன்மைகளை நீங்கள் சரியாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள். மேலும், வான்வழி படங்கள் மற்றும் வீடியோக்களை ரசித்தேன்!" என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details