தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹரியானாவில் பாஜகவுக்கு பாடம் கற்பித்த சுயேச்சை வேட்பாளர் தேவேந்திர காத்யன்! - DEVENDER KADYAN A BJP REBEL

ஹரியானா தேர்தலில் வழக்கமான கட்சி அரசியலில் ஏற்கெனவே ஏமாற்றத்தை சந்தித்திருந்த மக்கள், தங்களுக்கான வாய்ப்பாக தேவேந்திர காத்யனை கருதியுள்ளனர்.

தேவேந்திர காத்யன்
தேவேந்திர காத்யன் (Credits - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2024, 10:54 PM IST

சண்டீகர்: ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்பாக பாஜகவில் இருந்து விலகிய, தேவேந்திர காத்யன், தேர்தல் வெற்றி மூலம் தனது புதிய அத்தியாயத்தை துவங்கியுள்ளார்.

தொழிலதிபரும், இந்திய மல்யுத்த சம்மேளன (WFI) தேசிய துணைத் தலைவருமான காத்யன், சோனிபட் மாவட்டத்தில் உள்ள கானூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில், அவர் 77,248 வாக்குகள் பெற்று, காங்கிரஸின் குல்தீப் சர்மாவை 35,209 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பாஜக வேட்பாளர் தேவேந்திர கவுசிக் 17,605 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

இந்நிலையில், தன் மீது நம்பிக்கை வைத்து வெற்றிபெறச் செய்த கானூர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், "இந்தத் தேர்தலில் ஒத்துழைப்பு, ஆதரவு மற்றும் அன்பு செலுத்தி, என்னை வெற்றி பெறச் செய்த தொண்டர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் என்னுடன் நின்றது போல், இந்த மண்ணின் மகன் எப்போதும் உங்கள் அனைவரோடும் நிற்பான் என உறுதியளிக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இத்தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்ட நிலையில் பாஜகவிலிருந்து வெளியேறிய தேவேந்திர காத்யன், ஜனநாயக நெறிமுறைகளை சமரசம் செய்து கொண்டு, பாஜக தேர்தல் சீட்டுகளை விற்று வருகிறது என குற்றம்சாட்டினார். இந்நிலையில் கானூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு காத்யன் வெற்றி பெற்றுள்ளார்.

இதையும் படிங்க:கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 50 பேர் கூண்டோடு ராஜிநாமா!

தனது உத்வேகமான செயல்பாடுகளால் ஆளுமையாக அறியப்பட்ட அவர், குமட், சர்தானா, பிகன் மற்றும் பிப்லி கே ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்தார். இப்பகுதிகளில் வழக்கமான கட்சி அரசியலில் ஏற்கெனவே ஏமாற்றத்தை சந்தித்திருந்த மக்கள், தங்களுக்கான வாய்ப்பாக தேவேந்திர காத்யனை கருதியுள்ளனர்.

இந்நிலையில் தேவேந்திர காத்யனின் பிரச்சார அம்புகள், தன்னை சுயேச்சையாக களமிறங்கும் சூழ்நிலைக்கு தள்ளிய பாஜக மீது பாய்ந்தன. மல்யுத்த விளையாட்டுடன் காத்யனுக்கு உள்ள தொடர்பு, அவரது வணிகப் புத்திசாலித்தனம் ஆகியவை மக்கள் மத்தியில் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை ஏற்கெனவே ஏற்படுத்தியிருந்தது.

நெடுஞ்சாலையோர உணவகங்கள் மற்றும் மன்னாட் குழும ஹோட்டல்களின் தலைவராக தேவேந்திர காத்யன் இருந்து வருகிறார். மல்யுத்த அமைப்பில் பூகம்பம் வெடித்தபோது, அந்த அமைப்பின் துணைத் தலைவராக காத்யன் பதவியேற்றார். அதன் பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளுடன் அவர் நெருக்கமான உறவை கடைப்பிடித்தார். இது அவருக்கு மேலும் வலு சேர்த்தது.

இதுதவிர, தொழில் முனைவோர் முயற்சிகள் மற்றும் சமூகப் பணிகளையும் தேவேந்திர காத்யன் வழிநடத்தியதோடு, உள்ளூர் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் தேவா சமூக நலச் சங்கத்தின் நிறுவனராகவும் உள்ளார்.

முன்னதாக ஹரியானா இளைஞர் ஆணையத் தலைவராக முதல்வர் நயாப் சிங் சைனியால் நியமிக்கப்பட்டபோது தேவேந்திர காத்யனின் செல்வாக்கை அதிகரித்திருந்தது. இவை எல்லாம் ஒன்று சேர்ந்ததன் விளைவாக இன்று வாக்குப்பதிவு துவங்கியது முதலே முன்னிலைப் பெற்ற தேவந்திர காத்யனின் வெற்றி, யாராலும் தடுக்க இயலாத ஒன்றி நிலை நின்றது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details