தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி மக்களுக்கு தரமான சாலை வசதி: ஆய்வில் இறங்கிய முதல்வர் அதிஷி! - CM Atishi Inspect Roads - CM ATISHI INSPECT ROADS

சாலைகளில் அனைத்து சீரமைப்புப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், மக்கள் சிறந்த சாலை வசதிகளைப் பெறவும் ஆய்வின்போது அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் வழிகாட்டுதலின் கீழ், தீபாவளிக்குள் குண்டும் குழியும் இல்லாத சாலைகளில் டெல்லி மக்கள் பயணிக்கச் செய்வதே எங்களின் முயற்சி என டெல்லி முதல்வர் அதிஷி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் சாலைப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் அதிஷி
டெல்லியில் சாலைப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் அதிஷி (Credits - PTI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2024, 12:44 PM IST

டெல்லி: தேசிய தலைநகரான டெல்லியில் வரும் தீபாவளிக்குள், தரமான சாலை வசதியை உறுதி செய்வதற்காக, அம்மாநில முதல்வர் அதிஷி தலைமையிலான அமைச்சர்கள் இன்று காலை ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.

தெற்கு, தென்கிழக்கு டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த ஆய்வுப் பணியின்போது முதல்வர் அதிஷியுடன், பொதுப்பணித் துறை பொறியாளர்கள் உடன் சென்றனர். ஆய்வுப் பணிகளுக்கு பின்னர், எக்ஸ் தளத்தில் முதல்வர் அதிஷி வெளியிட்டுள்ள பதிவில், "என்எஸ்ஐசி ஒஹ்லா, மோடி மில் மேம்பாலம், சிராக் டில்லி, துகலகாபாத், மதுரா சாலை, ஆஷ்ரம் சவுக் மற்றும் அதன் சுரங்கப்பாதை ஆகிய இடங்களில் சாலைகள் பழுதடைந்து, பள்ளங்களாக உள்ளன. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

எனவே சாலைகளில் அனைத்து சீரமைப்புப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், மக்கள் சிறந்த சாலை வசதிகளைப் பெறவும் ஆய்வின்போது அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் வழிகாட்டுதலின் கீழ், தீபாவளிக்குள் குண்டும் குழியும் இல்லாத சாலைகளில் டெல்லி மக்கள் பயணிக்கச் செய்வதே எங்களின் முயற்சி." என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய பஸ்.. விபத்தில் ஒன்பது பேர் பலி

இதேபோல் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் கிழக்கு டெல்லியில் உள்ள சாலைகளை ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து சிசோடியா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "டெல்லி மக்களுக்காக ஆம் ஆத்மி அரசு செய்து வரும் பணிகளை முடக்குவதற்காக, பாஜக என்னையும், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் பொய் வழக்குகளில் சிறையில் அடைத்தது. இதனாலேயே, சாலைகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்கள் கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் ஹுசைன், முகேஷ் அஹ்லாவத் ஆகியோரும் சாலைகளை ஆய்வு செய்தனர். கோபால் ராய் வடகிழக்கு டெல்லியில் சாலைகளை ஆய்வு செய்தார். மேற்கு மற்றும் தென்மேற்கு டெல்லியில் கைலாஷ் கெலாட், புது டெல்லியில் இம்ரான் ஹுசைன், மத்திய டெல்லி, வடக்கு, வடமேற்கு டெல்லியில் முகேஷ் அஹ்லாவத் ஆய்வு செய்தனர்.

முதல்வர் அதிஷி தலைமையில் நகரில் உள்ள சாலைப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சாலைகளை ஆய்வு செய்து, சீரமைக்க வேண்டிய சாலைகளை ஒருவாரத்துக்குள் கண்டறிய வேண்டும். ஆய்வுப் பணிகளுக்குப் பிறகு, சாலை சீரமைப்புப் பணிகள் துவங்கும். அக்டோபர் இறுதிக்குள் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்பட வேண்டும் முதல்வர் அதிஷி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details