தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி ஐஏஎஸ் மாணவர்கள் உயிரிழப்பு; மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம்! - Manickam Tagore adjournment notice

IAS Aspirant died: டெல்லியில் யுபிஎஸ்சி தேர்வு மையத்தில் மழைநீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்துள்ள நிஅலியில், டெல்லியின் உள்கட்டமைப்பு இழப்புகள் தொடர்பாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் செய்துள்ளார்.

Manickam Tagore
மாணிக்கம் தாகூர் (Credits - ANI)

By ANI

Published : Jul 29, 2024, 12:04 PM IST

டெல்லி: கடந்த ஜூலை 22ஆம் தேதி தொடங்கிய மத்திய பட்ஜெட் உரை மீதான விவாதம் ஆகஸ்ட் 12 வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில், இன்று தொடங்கிய பட்ஜெட் உரை மீதான விவாதத்தில், மாநிலங்களவையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச உள்ளார்.

அது மட்டுமல்லாமல், டெல்லி ராஜேந்திர நகரில் மூன்று ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த விவகாரம் குறித்து விதி எண் 267-ன் கீழ் விவாதம் நடத்த பாஜக எம்பிக்கள் முடிவெடித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மாநிலங்களவையில் விவாதிக்க உள்ளனர்.

அதேநேரம், விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், ‘டெல்லியின் உள்கட்டமைப்பு இழப்புகள் மற்றும் அந்த இழப்புகளுக்கான பொறுப்புகளை’ கோரும் நோக்கத்திற்காக ஒத்திவைப்பு தீர்மானத்தை மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். மேலும், இன்று யூனியன் பிரதேசத்திற்கான பட்ஜெட் அமைக்க ஜம்மு மற்றும் காஷ்மீர் ஒதுக்கீட்டு மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்ய உள்ளார்.

முன்னதாக, நேற்று மத்திய டெல்லி பகுதியில் உள்ள பழைய ராஜேந்திரா நகரில் இயங்கி வரும் ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் கீழ் தளத்தில் உள்ள நூலகத்தில் மாணவர்கள் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெள்ள நீர் புகுந்தது. இதனையடுத்து, மாணவர்கள் அங்கிருந்து வெளியேற முயற்சி செய்வதற்கு முன்னால் வெள்ள நீர் முழுவதுமாக சூழந்துள்ளது. அதன் பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த பேரிடர் மீட்புப் படையினர், மோட்டர் மூலம் நீரை உறிஞ்சி சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, தன்யா சோனி, நெவின் டால்வின் மற்றும் ஸ்ரேயா யாதவ் ஆகியோரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டன. இதனையடுத்து, பிற மாணவர்கள் நேற்று இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். அது மட்டுமல்லாமல், சம்பவம் நடந்த கட்டடத்தின் 3 தரைத்தளங்களுக்கு டெல்லி மாநகராட்சி சீல் வைத்தது.

இதையும் படிங்க:ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் புகுந்த வெள்ளநீர்.. யுபிஎஸ்சி மையம் அறிக்கை.. தரைத்தளத்திற்கு சீல்!

ABOUT THE AUTHOR

...view details