புவனேசுவரம்:டானா புயல் இன்று (அக்.25) அதிகாலை கரையைக் கடந்தது. வடமேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த புயல் வடக்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, மணிக்கு 100-110 கிமீ வேகத்தில் நகர்ந்து, ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தின் பிதர்கனிகா தேசிய பூங்கா மற்றும் பத்ரக் மாவட்டத்தின் தாம்ரா துறைமுகம் இடையே கரையைக் கடந்தது.
முன்னெச்சரிக்கையாக, கேந்திரபாரா, பத்ரக், பாலசோர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு, 8,332 நிவாரண முகாம்களில் தங்க வைப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட 4,431 கர்ப்பிணிகளில் 1,600 பெண்கள் குழந்தை பெற்றுள்ளதாக முதலமைச்சர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார். மேலும், 56 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் உள்பட பல்வேறு மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.