எலுரு: ஆந்திர மாநிலம் எலுரு மாவட்டத்திற்குட்பட்ட கிழக்கு தெரு பகுதியில் உள்ள கெளரி தேவி கோயில் அருகே, சுதாகர் என்பவர் இன்று (அக்.31) தனது ஸ்கூட்டியில் பட்டாசுகளை வாங்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து நிகழ்ந்தது.
இதனையடுத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் சுதாகரின் உடல் பாகங்கள் சிதறியது. குறிப்பாக, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை உள்ள கட்டடங்களின் சுவற்றில் சுதாகரின் சதைகள் வந்து ஒட்டியதாக அப்பகுதி மக்கள் அதிர்ச்சி தகவலை அளித்துள்ளனர்.
வெடி விபத்தின் சிசிடிவி காட்சிகள் (Credits - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:தீபாவளி கொண்டாடியாச்சா! அப்டினா உடல் உறுப்புகளை தூய்மை செய்வது அவசியம்!
மேலும், சுதாகருடன் வந்திருந்த நபர் மற்றும் அங்கு நின்று கொண்டிருந்த மேலும் 5 பேர் என மொத்தம் 6 பேர் படுகாயங்கள் உடன் எளுரு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணையைத் துவக்கி உள்ளனர். அதில், இது வெறும் வெடி விபத்து மட்டுமல்ல, வேறு ஏதோ வெடி மருந்து இருந்துள்ளது என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.