டெல்லி: 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றன. மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன்.4) எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதலே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆம் ஆத்மி ஆளும் டெல்லியில் உள்ள 7 இடங்களிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது. புதுடெல்லி, கிழக்கு டெல்லி, தெற்கு டெல்லி மற்றும் மேற்கு டெல்லி என நான்கு தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிட்டது.
டெல்லி, வடகிழக்கு டெல்லி மற்றும் சாந்தி சௌக் ஆகிய மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. ஆனால், பாஜக தனித்து 7 தொகுதிகளிலும் போட்டியிட்டன. காலை முதலே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 7 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.
கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மல்கோத்ரா 1 லட்சத்து 69 ஆயிரத்து 540 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் குல்திப் குமார் 21 ஆயிரத்து 732 வாக்குகள் பின்தங்கி இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். சாந்தி செளக் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரவீன் கந்தேல்வால் 1 லட்சத்து 52 ஆயிரத்து 29 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜெய் பிரகாஷ் அகர்வால் 20 ஆயிரத்து 768 வாக்குகள் பின்தங்கி இரண்டாவது இடத்தில் உள்ளார். புது டெல்லியில் பாஜக வேட்பாளர் பன்சுரி ஸ்வராஜ் 1 லடசத்து 51 ஆயிரத்து 661 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ஆம் ஆத்மி வேட்பாளர் சோம்நாத் பாரதி 21 ஆயிரத்து 648 வாக்குகள் பின்தங்கி 2வது இடத்தில் உள்ளார்.
தெற்கு டெல்லியில் பாஜக வேட்பாளர் ராம்வீர் சிங் பிதூரி 2 லடசத்து 77 ஆயிரத்து 240 வாக்குகள் பெற்றும் முன்னிலையில் உள்ளார். அதேபோல் மேற்கு டெல்லி, வடகிழக்கு டெல்லி மற்றும் வடமேற்கு டெல்லி ஆகிய தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:பாஜக, காங்கிரசுக்கு டஃப் கொடுக்கும் சுயேட்சைகள்! திரும்பி பார்க்க வைத்த தொகுதிகள்! - Lok Sabha Election 2024 Results