தமிழ்நாடு

tamil nadu

காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த அசோக் சவான் ராஜ்ய சபா எம்பி வேட்பாளராக களமிறக்கம்!

By ANI

Published : Feb 14, 2024, 5:48 PM IST

Updated : Feb 15, 2024, 6:36 AM IST

BJP Rajya Sabha MP list release: பாரதிய ஜனதா கட்சி சார்பாக, இன்று (பிப்.14) 7 பெயர்கள் அடங்கிய மாநிலங்களவை உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்த அசோக் சவான் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

bjp-chief-nadda-is-rajya-sabha-poll-candidate-from-gujarat-ex-cm-chavan-from-maharashtra
ஜே.பி.நட்டா, அசோக் சவான் உட்பட 7 பேர் கொண்ட பட்டியல் வெளியிட்டது பாஜக..

டெல்லி: பாரதிய ஜனதா கட்சி சார்பாக, இன்று (பிப்.14) 7 பெயர்கள் அடங்கிய மாநிலங்களவை உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்த அசோக் சவான் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி சார்ப்பில் வெளியிடப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர் பட்டியலில், குஜராத்திலிருந்து ஜெ.பி.நட்டா, கோவிந்த்பாய் தோலாக்கியா, மாயன்பாய் நாயக் மற்றும் ஜஷ்வந்த்சிங் பர்மர் ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளது. அதேபோல், மகாராஷ்டிராவிலிருந்து அசோக் சவான், மேதா குல்கர்னி மற்றும் அஜித் கோப்சாடே ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அசோக் சவான், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி நேற்று (பிப்.13) அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், இமாச்சலப் பிரதேசத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஜெ.பி.நட்டா, அங்கு போதிய தொகுதிகளில் பாஜக வெற்றி பெறாத காரணத்தினால் குஜராத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒடிசாவிலும், இணை அமைச்சர் எல்.முருகன் மத்தியப் பிரதேசத்தில் நிறுத்த பாஜக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்.12) மாநிலங்களவை தேர்தலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என்.சிங் மற்றும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி உள்பட 14 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் பிப்ரவரி 15 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் ஆகும் மற்றும் 33 சதவீத இடங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போது மொத்தமாக மாநிலங்களவையில் 245 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

மொத்தம் உள்ள 245 மாநிலங்களவை உறுப்பினர்களில், 233 பேர் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து தேர்வு செய்யப்படுகின்றனர். 12 பேர் குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்படுபவர்கள் ஆவர். மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்களை மறைமுகத் தேர்தல் மூலம் தேர்வு செய்கின்றனர். மேலும், உத்தரப் பிரதேசம் உள்பட 15 மாநிலங்களுக்கு பிப்.27ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் பிப்ரவரி 15ஆம் தேதி முடிவடைகிறது. பிப்ரவரி 27ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 27ஆம் தேதியே 56 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:"தமிழ்நாட்டின் தலையில் தொங்கும் கத்தி"- தொகுதி மறுசீரமைப்பை விமர்சிக்கும் மு.க.ஸ்டாலின்

Last Updated : Feb 15, 2024, 6:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details