பாட்னா:பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், அம்மாநில ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் ஆர்லேகரை இன்று (ஜன.28) ராஜ்பவனில் சந்தித்து தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க கோரிக்கை (Bihar political crisis) முன்வைத்தார்.
முன்னதாக, நிதிஷ்குமார் தலைமையில் அவரது இல்லத்தில் ஜனதா தளம் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டார். அதன் பிறகே, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பின்னர் பிரதமர் மோடியின் "மன் கீ பாத்" உரையை தொடர்ந்து, பாஜக எம்எல்ஏக்கள தங்கள் ஆதரவு கடிதத்தை வழங்கியுள்ளனர்.
இதனிடையே, தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "மகாகத்பந்தன் கூட்டணியின் (Mahagathbandhan) நிலை சரியில்லை, கூட்டணி திசை திரும்பி விட்டது. இன்று நான் ஆளுநரிடம் ராஜினமா கடிதம் வழங்கி, மாநிலத்தில் ஆட்சியை கலைக்க கோரினேன். பொருத்திருந்து பாருங்கள், என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:மராத்தா இட ஒதுக்கீடு: நேரில் சென்று உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே!
இந்த நிலையில், இன்று மாலை 4 மணி அளவில் நிதீஷ் குமார், பாஜக கூட்டணியுடன் மீண்டும் பதவி ஏற்கவுள்ளார். பீகார் மாநிலத்தின் 243 சட்டமன்றத் தொகுதிகளில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) 79 தொகுதிகள், பாரத ஜனதா கட்சி (BJP) 78 தொகுதிகளும், ஐக்கிய ஜனதா தளம் (45) தொகுதிகளும் பெற்றுள்ளனர். மேலும், காங்கிரஸ் 19 தொகுதிகளும், கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சிகள் 12 தொகுதிகளும் பெற்றுள்ளனர்.
மேலும், நிதீஷ் குமார் ஆட்சியைப் பிடிப்பதற்காக தனது விசுவாசத்தை மாற்றிக்கொள்வது இது முதல் முறையல்ல என்பதால் அவரின் இந்த முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. குறிப்பாக, இந்தியா கூட்டணியின் (INDIA Alliance) ஒருங்கிணைப்பாளர் பதவியை அவர் ஏற்க மறுத்ததிலிருந்து, அவர் கூட்டணியில் இருந்து விலகுவதாக யூகங்கள் பேசப்பட்டு வந்தன.
இதனிடையே, இன்று நடைபெறும் பதவிப் பிரமாணம் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து நிநிஷ்குமார் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனால், இவரின் இந்த முடிவால் 2024 நாடாளுமன்ற நெருங்கும் வேளையில் அம்மாநிலத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் இதனால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:பீகாரில் முதல்வர் பதிவியை ராஜினாமா செய்து மீண்டும் பாஜகவுடன் இணையும் நிதிஷ் குமார்?