தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 2, 2024, 4:43 PM IST

ETV Bharat / bharat

அருணாசல பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்தது பாஜக! காங்கிரஸ் படுதோல்வி! - Arunachal pradesh Election result

அருணாசல பிரதேசம் சட்டமன்ற தேர்தலில் பாஜக அறுதி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

Etv Bharat
PEMA KHANDU, Arunachal Pradesh CM (ANI)

டெல்லி:18வது மக்களவை தேர்தலுடன் சேர்த்து அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை மற்றும் 4 மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது.

இதில் சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேச மாநில அரசுகளின் பதவிக் காலம் இன்றுடன் (ஜூன்.2) நிறைவு பெறுகிறது. இதனால், இரண்டு மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன்.2) காலை முதல் எண்ணப்பட்டன. அருணாசல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவைப்பட்டன.

இதில் பாஜக 46 இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. வரலாறு காணாத வகையில் அதிகளவில் இடங்களை கைப்பற்றி பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து தேசிய மக்கள் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்று உள்ளன.

மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும், அருணாச்சல மக்கள் கட்சி 2 இடங்களில், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இதுதவிர சுயேட்சைகள் 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து இடாநகரில் உள்ள பாஜக கட்சி அலுவலகம் முன் திரண்ட தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், கோஷங்கள் எழுப்பியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அருணாசல பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து மாநில மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார். அதேபோல் முதமைச்சர் பேமா காண்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி இந்த முறை ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக 41 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஐக்கிய ஜனதா தளம் 7 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 5 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், அருணாச்சல் மக்கள் கட்சி 1 இடத்திலும், இரண்டு சுயேட்ச்சைகளும் வெற்றி பெற்றனர்.

இதையும் படிங்க:சிக்கிம் கிராந்தகரி மோர்ச்சா அபார வெற்றி! மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது! - Sikkim Assembly Election Result2024

ABOUT THE AUTHOR

...view details