விஜயவாடா:ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு எதிராக தலைமைச் செயலகம் நோக்கி (Chalo Secretariat) போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளாவை வீட்டுக்காவலில் வைக்கப்படுவதில் இருந்து தப்புவதற்காக கட்சி அலுவகத்தில் இரவில் தங்கியுள்ளார்.
வேளைவாய்ப்பின்மையால் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையைத் தீர்க்ககோரி ஆந்திர மாநில காங்கிரஸ் தொண்டர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இதுகுறித்து ஆந்திரா காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா விஜயவாடாவில் உள்ள ஆந்திரா காங்கிரஸ் தலைமை அலுவலகமான ஆந்திரா ரத்னா பவனில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மையால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஜெகன் மோகன் ரெட்டி தோல்வி அடைந்து விட்டார்" எனத் தெரிவித்திருந்தார். மேலும், அவரது X பக்கத்தில், "வேலைவாய்ப்பற்றவர்களுக்கு ஆதரவாக நாங்கள் போராடினால் எங்களை வீட்டுச் சிறையில் அடைப்பீர்களா?
ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்த எங்களுக்கு உரிமை இல்லையா? போலீசாரிடமிருந்தும், வீட்டுச் சிறையில் வைக்கப்படுவதில் இருந்தும் தப்புவதற்காக ஒரு பெண் கட்சி அலுவலகத்தில் இரவைக் கழிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நாங்கள் பயங்கரவாதிகளா அல்லது சமூக விரோத சக்திகளா?