டெல்லி : மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாவது வேட்பாளர் பட்டியலை பாஜகட்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 72 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். கர்நாடக மாநிலம் ஷிமோகா தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா போட்டியிடுகின்றார்.
இந்த பட்டியலில் தமிழ்நாட்டினைச் சேர்ந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த பட்டியலில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிடுகின்றார். அதேபோல் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இமாச்சல பிரதேசத்தின் ஹமிர்பூரிலும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மகாராஸ்ட்ரா மாநில நாக்பூரிலும் போட்டியிடுகின்றனர்.