மும்பை: கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கான் வசிக்கும் கேலக்சி அபார்மண்டஸ் முன்பு, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். இச்சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைபற்றி மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இரண்டு பேரை மும்பை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவருக்கும் ஆயுத சப்ளை செய்ததாக அனுஜ் தபான், சோனுகுமார் பிஷ்னாய் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். முதல் பஞ்சாப்பில் தலைமறைவாகி இருந்த அனுஜ் தபானை கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.
வழக்கு தொடர்பான விசாரணைக்கு மகாராஷ்டிரா சிறப்பு நீதிமன்றத்தில் நான்கு பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் சோனுகுமார் பிஷ்னாய் தவிர்த்து அனுஜ் தபான், விக்கி குப்தா, சாகட்ர் பால் ஆகிய மூன்று பேரை மே 8ஆம் தேதி வரை மகாராஷ்டிர குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.