டெல்லி: டெல்லியின் நங்லோய் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நிலையில், அந்த பெண் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கொலை செய்யப்பட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து டெல்லி போலீசார் தெரிவித்ததாவது, கொலை செய்யப்பட்ட இளம்பெண் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வந்துள்ளார். இதனால் அவருக்கு சஞ்சு (எ) சலீம் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நட்பாக பழகி நாளடைவில் காதலித்துள்ளனர்.
இதனால் இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர். அதன் விளைவாக இளம்பெண் கர்ப்பமாகியுள்ளார். கர்ப்பத்தை கலைத்துவிடுமாறு சலீம் கூறி வந்துள்ளார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து வந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சலீமை வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் அக்.21 அன்று இளம்பெண் தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு சலீமை காண வந்துள்ளார். அப்போது, சலீம் தன்னுடைய நண்பர்கள் பங்கஜ் மற்றும் ரித்திக் ஆகியோருடன் சேர்ந்து வாடகை காரை எடுத்துக்கொண்டு இளம்பெண்ணுடன் ஹரியானாவுக்கு சென்றுள்ளனர்.