தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பீகாரில் 'ஜிதியா' பண்டிகை: நீராட சென்றபோது ஆற்றில் மூழ்கி 40 பேர் உயிரிழப்பு - Jitiya Festival In Bihar - JITIYA FESTIVAL IN BIHAR

'ஜிதியா' பண்டிகை என்பது தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக கொண்டாடுகிறார்கள். இப்பண்டிகையையொட்டி, தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் பல்வேறு நீர்நிலைகளில் நீராடச் செல்கின்றனர். அவ்வாறு சென்றபோது பீகாரில் சுமார் 40 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பீகாரில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னாவில் கங்கை நீர் மட்டம் உயர்ந்து வருவதால், நக்தா தியாரா பகுதியில் உள்ள கிராம மக்கள் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
பாட்னாவில் கங்கை நீர் மட்டம் உயர்ந்து வருவதால், நக்தா தியாரா பகுதியில் உள்ள கிராம மக்கள் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். (Credits - ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2024, 6:51 PM IST

பாட்னா:பீகாரில் ஜிதியா பண்டிகை கொண்டாட்டத்தில் 14 வெவ்வேறு மாவட்டங்களில் ஆற்றில் மூழ்கி 40 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவர்.

அவுரங்காபாத் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் பரூன் வட்டாரத்தில் உள்ள இத்தாட் கிராமத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள், மதன்பூர் பிளாக்கில் உள்ள குஷாஹா கிராமத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் என 10 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பீகார் முதல்வர் நிதீஷ் குமார், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அவுரங்காபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட மதன்பூர் தொகுதியின் குஷா கிராமத்தில் 4 குழந்தைகளும், பரூன் தொகுதியின் இத்தாட் கிராமத்தில் 3 குழந்தைகளும் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்தனர்.

இறந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் தாமதமின்றி வழங்கப்படும். இந்த துக்க நேரத்தில் உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு வலியை தாங்கும் சக்தியை இறைவனிடம் வேண்டுகிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ராகுல் காந்தி பிரிட்டிஷ்காரரா? பொதுநல வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு!

கைமூரில் வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். சரண் மாவட்டத்தின் சாப்ராவில் நேற்று 5 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பாட்னாவில் ஜிதியா பண்டிகையின் போது நீரில் மூழ்கி 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். தகவலின்படி, நேற்று மாலை பிஹ்தா நகர் அருகே அமனாபாத் ஹல்கோரியா சாக் கிராமத்தில் உள்ள சோன் ஆற்றில் நேற்று மாலை 4 சிறுமிகள் குளிக்கச் சென்றனர். அப்போது ஆற்று வெள்ளத்தில் சிக்கி அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கிழக்கு சம்பாரன் மாவட்டத்தின் மோதிஹாரியில் 4 குழந்தைகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கல்யாண்பூர் வட்டாரத்தின் கரீபா பஞ்சாயத்தில் குடும்பத்தினருடன் குளிக்கச் சென்ற குழந்தைகள் சோம்வதி ஆற்றில் தவறி விழுந்தனர். பிருந்தாவன் பஞ்சாயத்தில் தண்ணீர் நிரம்பிய குட்டையில் மூழ்கி தாய்-மகள் இருவர் உயிரிழந்தனர்.

ஹர்சித்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஷுன்பூர்வா குளத்தில் மற்றொரு குழந்தை மூழ்கி உயிரிழந்தது. மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் 3 பேர் இறந்தனர். ரோஹ்தாஸ் மாவட்டத்தின் டெஹ்ரியில் உள்ள சோன் ஆற்றில் மூழ்கி மூவர் உயிரிழந்தனர்.

'ஜிதியா' பண்டிகை என்பது தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக கொண்டாடுகிறார்கள். இப்பண்டிகையையொட்டி, தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் பல்வேறு நீர்நிலைகளில் நீராடச் செல்கின்றனர். அவ்வாறு சென்றபோது பீகாரில் சுமார் 40 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பீகாரில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details