டெல்லி: இன்று முதல் (நவ.1) வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.61.50 உயர்ந்துள்ளதாக எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களிடம் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், நவம்பர் மாதத்தில் இருந்து 19 கிலோ எடை கொண்ட வணிக எல்பிஜி (LPG) எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.61.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், அக்டோபர் மாதம் வரை சென்னையில் 1,903க்கு விற்பனையாகி வந்த சிலிண்டர் விலை, நவம்பர் மாதத் துவக்க நாளான இன்று முதல் ரூ.1964.50 ஆக விற்பனையாகிறது. அதே நேரத்தில், வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தப்படும் சமையல் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.818.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.