ஆக்ரா:உத்தரபிரதேசத்தில்12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில், தேர்வு தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள் கணிதம் மற்றும் உயிரியல் வினாத்தாள்கள் வாட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டு வருகின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட பள்ளிகள் கண்காணிப்பாளர் (DIOS -District Inspector of Schools ) தினேஷ் குமார், பதேபூர் சிக்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், பதேபூர் சிக்ரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து, அதர் சிங் இன்டர் கல்லூரியின் (Atar Singh Inter College) முதல்வர் ராஜ்ஹௌலி, அவரது மகன் மற்றும் பல்வேறு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ‘ஆல் பிரின்சிபல்ஸ் ஆக்ரா’ (All Princiapls Agra) என்ற வாட்ஸ் அப் குழுவில், பொதுத்தேர்வு வினாத்தாள்கள், அதர் சிங் இன்டர் கல்லூரியின் முதல்வரின் மகனால் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.