ஜாதிக்காயின் அந்த ஜாலம் சொல்கிறது காவேரி கூக்குரல் கருத்தரங்கு
சமவெளியில் மரவாசனைப் பயிர்கள் சாத்தியம் என்ற மாபெரும் கருத்தரங்கம், ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் தாராபுரத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மரவாசனைப் பயிர்களில் முக்கியமான ஒன்றாக ஜாதிக்காய் இருக்கிறது. இந்த கருத்தரங்கில் ஜாதிக்காய் சாகுபடி முதல் அதன் சந்தை வாய்ப்புகள் வரை பல்வேறு தகவல்கள் பகிர்ந்து கொள்ளபட இருக்கின்றன. சமவெளியில் ஜாதிக்காய் சாத்தியமா என்ற கேள்வியோடு, இது குறித்து தெரிந்து கொள்ள அதனை சமவெளியில் பயிரிட்டு லட்சங்களில் லாபம் ஈட்டும் பொள்ளாச்சியை சேர்ந்த மருத்துவர் மூர்த்தி அவர்களை சந்தித்தோம்.
அவர் ஜாதிக்காய் மரங்கள், அதன் பராமரிப்பு, தட்பவெட்ப சூழல் மற்றும் விளைச்சல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து நம்மிடம் விரிவாக பகிர்ந்து கொண்டார். மருத்துவர் என்பதாலோ என்னவோ மிகவும் தன்மையாகவும் மென்மையாகவும் பேசத் துவங்கினார். “என்னுடைய தோட்டம் ஆழியாரில் இருக்கிறது, 2021-ஆம் ஆண்டு முதல் இந்த தோட்டத்தினை நான் பராமரித்து வருகிறேன்.
எங்கள் தோட்டத்தில் 25 அடிக்கு ஒரு தென்னை மரம் நடவு செய்து இருக்கிறோம். இதில் நான்கு தென்னை மரங்களுக்கு நடுவில் ஒரு ஜாதிக்காய் மரம் நட்டு இருக்கிறோம். மொத்தம் 350 தென்னை மரங்களும், இதற்கு இடையே 252 ஜாதிக்காய் மரங்களும் இருக்கின்றது. மேலும் 500 முட்கள் 600 பாக்கு மரங்களும் இதனிடையே இருக்கின்றது. அதே போன்று ஒவ்வொரு தென்னை மரத்திற்கும் 2 அல்லது 3 சிறுமிளகு கொடி ஏற்றி விட்டு இருக்கிறோம்.
செயற்கை உரங்கள் இல்லாமல் மரங்களை பராமரிக்க முடிகிறதா என்று நாம் கேட்ட போது, யூரியா, டிஏபி போன்ற எந்த செயற்கை உரங்களும் இல்லாமல் மாட்டு சாணி, வேப்ப புண்ணாக்கு போன்ற இயற்கை உரங்கள் மட்டுமே பயனபடுத்தி வருகிறோம். ஜாதிக்காய் வருடம் கூட, கூட காய்ப்பு அதிகமாகி கொண்டே போகிறது, உதாரணமாக இரண்டாம் வருடத்தை விட மூன்றாம் வருடம் அதிக காய்ப்பு கிடைத்து இருகின்றது. இயற்கை முறையில் பராமரிப்பு செய்வதால் காய்ப்பு குறையவில்லை என்று தான் கூற வேண்டும் எனக் கூறினார்.