World braille day: பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு கற்சிலைகளைத் தொடவைத்து பாடம் - நெல்லை அருங்காட்சியகத்துக்கு வந்த பார்வையற்ற மாணவர்கள்
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: உலகப் பார்வையற்றோர் நாளை முன்னிட்டு திருநெல்வேலியில் உள்ள பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களை மதர் பைரோஸ் டிரஸ்ட் நிர்வாகிகள் இன்று (ஜனவரி 4) பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்திற்கு சுற்றுலா அழைத்துச் சென்றனர். அருங்காட்சியகத்தில் ஏராளமான வரலாற்று கற்சிலைகள், ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளன. கற்சிலைகள் குறித்த வரலாற்றை பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வண்ணம் அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி, மாணவர்களின் கையைப் பிடித்து கற்சிலைகளைத் தொடவைத்து வடிவமைப்பு, அதன் வரலாறு குறித்து மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.