கோவை மாநகரப் பகுதியில் நள்ளிரவில் தொடரும் இருசக்கர வாகன திருட்டு - கோவை மாநகர பகுதியில் பைக் திருட்டு
🎬 Watch Now: Feature Video

கோயம்புத்தூர்: நள்ளிரவில் இருசக்கர வாகனங்கள் திருடும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போலீசாருக்கு வருகின்ற புகாரில் வாகன திருட்டு புகார் இல்லாத நாட்களே இல்லை. வீடு மற்றும் சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களை நோட்டமிட்டு வண்டியை லாவகமாக திருடி செல்கின்றனர். குழுவாக வந்து சைடு லாக்கை உடைத்து மற்றொரு திருட்டு நண்பரின் உதவியுடன் டோ செய்து லாவகமாக திருடி செல்கின்றனர். கோயமுத்தூரில் இந்த மாதம் மட்டும் மர்ம நபர்களின் கைவரிசையால் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக வாகன உரிமையாளர்கள் கூறுகின்றனர்.