ராஜஸ்தானில் டி-61 புலி உடல் தகனம்
🎬 Watch Now: Feature Video
சாவை மதோபூர்: ராஜஸ்தானில் சாவை மதோபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ரந்தம்பூர் புலிகள் காப்பகத்தில் 7ஆவது மண்டலத்தில் நேற்று(மே 13) இறந்த நிலையில் 12 வயதுடைய டி-61 புலி கண்டுபிடிக்கப்பட்டது. டி-61 புலி உயரமான பாறையில் இருந்து விழுந்ததால் இறந்திருக்கலாம் என்றும், முதுமை காரணமாக இறந்திருக்கலாம் என கூறுகின்றனர். எனினும் உடற்கூராய்வு அறிக்கை வந்த பிறகே, புலி இறந்ததற்கான சரியான காரணம் தெரியவரும். இதையடுத்து இறந்த டி-61 புலியை வனத் துறை அலுவலர்கள் தகனம் செய்தனர்.