சாலையில் ஓடிக்கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து - வைரலாகும் வீடியோ! - வைரலாகும் வீடியோ
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் - தென்னமநல்லூர் சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி கார் ஒன்றில் திடீரென தீ பிடிக்கத் தொடங்கியுள்ளது. காரின் ஓட்டுநர் காரை சாலையோரமாக நிறுத்தி விட்டு இறங்கி ஓடியுள்ளார். அதற்குள் தீ கார் முழுவதும் பரவியுள்ளது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு ஓட்டுநர் தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த தொண்டாமுத்தூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வாகனம் சேதமானது. கார் தீப்பிடித்து எரியும் காணொலி வைரலாகி வருகிறது.