சேலம் மாவட்ட ஆட்சியர் பங்காளா அருகே தீப்பற்றி உருக்குலைந்த கார்! - செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்
🎬 Watch Now: Feature Video
சேலம்: மகுடஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த சத்தியராஜ், நியாஸ் ஆகிய இருவரும் ஆம்னி காரில் இன்று (மே 28) ஏற்காட்டிலுள்ள சுற்றுலா தலத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, தீப்பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்து வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணிநேரம் போராடி தீயை அணைத்ததோடு, ஆம்னி காரில் பொருத்தப்பட்டிருந்த கேஸ் நிரப்பப்பட்ட டேங்க் வெடிக்காமல் தடுக்கப்பட்டது. இது குறித்து அஸ்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் சேலம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்தினி அவர்கள் தீ விபத்து நடைபெற்ற இடத்தில் பார்வையிட்டு தீ விபத்துக்கான காரணம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.