மழைநீருடன் சேர்ந்து கழிவு நீரில் தத்தளிக்கும் மேம்பாலச்சுரங்கப்பாதை - அவதியுறும் மக்கள் - ஆம்பூர் ரெட்டித்தோப்பு
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் : ஆம்பூர் ரெட்டித்தோப்பு பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ரெட்டித்தோப்பு வழியாகவே நாயக்கனேரி, பனங்காட்டேரி போன்ற மலைக் கிராமங்களுக்கு செல்ல முடியும். அந்த ஊர்களுக்கு செல்வதற்கு ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பால சுரங்கப்பாதையைத் தாண்டி தான் செல்ல வேண்டும். இம்மேம்பாலத்தின்கீழ் மழைக் காலங்களில் மழை நீருடன் சேர்ந்து கழிவுநீர் கலந்து தேங்குவதால் அந்த மாசடைந்த நீரை கடந்தே இப்பகுதிமக்கள் தங்கள் பணிக்கும் இருப்பிடத்திற்கும் செல்கின்றனர். இப்பகுதி மக்கள் பல முறை ரயில்வே மேம்பாலம் அமைத்து தர பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் தமிழ்நாடு அரசிடம் பல முறை மனு அளித்தும் இதுவரையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க எவ்வித முயற்சியும் எடுக்காத நிலையில் வேறு வழியில்லாமல் மக்கள் கழிவுநீரை கடந்தே செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.