லாபம் தரும் ரெயின்போ டிரவுட் மீன் வளர்ப்பு!
🎬 Watch Now: Feature Video
காஷ்மீரில் அமைந்திருக்கும் இயற்கை நீரூற்றுகளில் கனஜோராக நடந்து வருகிறது ரெயின்போ டிரவுட் மீன்வளர்ப்பு. இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர்களால் காஷ்மீருக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மீன் வகை, இன்று இந்த பனிப்பள்ளத்தாக்கின் இயற்கை நீரூற்றுகளை தனதாக்கிக் கொண்டு செழித்து வளர்கின்றன.
வானவில் டிரவுட் வகை மீன்களை இனப்பெருக்கம் செய்வதற்கு காஷ்மீரின் தெற்கு பகுதியிலுள்ள அனந்த்நாக் மாவட்டத்தின், கோக்கர்நாகில் டிரவுட் மீன் பண்ணை ஒன்று உள்ளது.
கடந்த 1984ஆம் ஆண்டு ஐரோப்பிய நிறுவனத்துடன் இணைந்து நிறுவப்பட்ட இந்த பண்ணை இன்று ஆசியாவின் மிகப்பெரிய டிரவுட் மீன் பண்ணையாக இருக்கிறது. டிரவுட் மீன் விற்பனை மூலம் கடந்த ஆண்டில் ரூ.1.74 கோடி வருவாய் ஈட்டியுள்ள இந்தப் பண்ணை ஆண்டுக்கு 18 முதல் 20 தொழில் முனைவோர்களுக்கு மீன்வளர்ப்பு பயிற்சி அளித்து வருகிறது. காஷ்மீர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் தங்களின் ஆய்வுப் பணிகளைத் தொடர உதவி வருகிறது.