வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குழந்தைகளை மழலையர் பள்ளியில் சேர்த்த பெற்றோர்கள் - குழந்தைகளை மழலையர் பள்ளியில் சேர்த்த பெற்றோர்கள்
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம் சுதாகர் நகரில் உள்ள மழலையர் பள்ளியில் இன்று விஜயதசமி விழாவை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். அப்போது கல்விக்கடவுளான சரஸ்வதி தேவிக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, தங்கள் குழந்தைகளின் கை விரல்களைப் பிடித்து தட்டில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த நெல் மணிகளில் உயிரெழுத்துக்களில் முதல் எழுத்தான அ மற்றும் ஓம் போன்ற எழுத்துகளை எழுத வைத்தும், குழந்தைகளின் நாவில் முதல் எழுத்தை எழுதியும்; பெற்றோர்கள் கல்வியறிவைத் தொடங்கி வைத்து மழலையர் பள்ளியில் ஆர்வமுடன் சேர்த்தனர்.