சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசிய கொடி - சிதம்பரம் நடராஜர் கோவிலில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றம்
🎬 Watch Now: Feature Video
கடலூர்: உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் 76 ஆவது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக, தேசிய கொடியை நடராஜர் கருவறையில் வைத்து பல்வேறு பூஜைகள் செய்து ஊர்வலமாக எடுத்து வந்து, கோவில் பொது தீட்சிதர்கள் 138 அடி உயரம் உள்ள கிழக்கு கோபுரத்தில் ஏற்றி மரியாதை செய்தனர். பின்னர் கோவிலுக்கு வரும் பொதுமக்களுக்கு லட்டு உள்ளிட்ட இனிப்புகள் வழங்கப்பட்டன.