கோயில் கொடிமரத்தில் ஒளிந்திருந்த உலோகங்கள் மந்திரங்கள் முழங்க மீட்பு! - copper coins
🎬 Watch Now: Feature Video
விசாகப்பட்டினம் மாவட்டம், சிங்ககிரியில் உள்ள சிம்ஹாசலம் கோயில் தேவஸ்தானத்தின் உள்கோயிலான ராமாலயத்தில் கொடிமரம் மீண்டும் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவில் நிர்வாக அலுவலர் சூர்யகலா தலைமையில் இடிந்து விழுந்த கொடிக்கம்பத்தை அகற்றும் பணி நடந்தது. அப்போது, கொடிமரத்தின் அடிப்பகுதியில் தங்கத்தால் செய்யப்பட்ட கருட யந்திரம், 112 செப்பு நாணயங்கள் மற்றும் தாமிரத்தால் செய்யப்பட்ட கொடிமர மாதிரி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இதனை காவல்துறையினர், கோயில் ஊழியர்கள், பக்தர்கள் முன்னிலையில் பஞ்சநாமம் நடத்தி வருவாய்த்துறையினர் மீட்டனர். இக்கோயிலின் கொடிமர திருப்பணி விழா வரும் 9 ஆம் தேதி நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.