சித்திரைத்திருவிழா தேரோட்டம்:மீனாட்சியைக் காண மாமதுரையில் கரைபுரண்ட மக்கள் வெள்ளம்! - மதுரை தேர் திருவிழா
🎬 Watch Now: Feature Video

மதுரை: உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 11ஆவது நாளான இன்று திருத்தேர் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் பதிகம் பாடி, தேரை வடம்பிடித்து இழுத்தனர். மீனாட்சி அம்மன் மற்றும் சுவாமி சுந்தரேஸ்வரர் தேர்கள் அசைந்தாடி உலா வந்ததைக் கண்டு பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஹர ஹர மகாதேவா என கோஷங்கள் எழுப்பி வணங்கி மகிழ்ந்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விமரிசையாக திருவிழா கொண்டாடப்பட்டு வருவதால், மக்கள் கூட்டம் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளனர்.