குன்னூர் அருகே இரவு நேரத்தில் உலா வரும் கரடி - அச்சத்தில் மக்கள் - குன்னூர் அருவங்காடு அருகே உள்ள ஜெகதளா கிராமம்
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: குன்னூர் அருவங்காடு அருகே உள்ள ஜெகதளா கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட படுகர் இன குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் அன்மைக்காலமாக கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் உலாவந்த கரடி, இங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது இப்பகுதி மக்களை அச்சப்பட வைத்துள்ளது. நாளுக்கு நாள் இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.