Sunday Lockdown: கழுகுப்பார்வையில் மயிலாடுதுறை முக்கிய சாலைகளும் தென்காசியின் வெறிச்சோடிய பாதைகளும்! - தமிழ்நாட்டில் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்
🎬 Watch Now: Feature Video
Sunday Lockdown: தமிழ்நாட்டில் கரோனா, ஒமைக்ரான் பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். மயிலாடுதுறை பேருந்து நிலையம், கச்சேரி சாலை, பெரியகடை வீதி, வண்டிக்காரத்தெரு உள்ளிட்ட முக்கிய கடைவீதிகளின் கழுகுப் பார்வை காட்சிகள் வெளியாகியுள்ளன. அதேபோல், தென்காசி மாவட்டத்தில் அத்தியாவசியத் தேவையின்றி, வெளியில் சுற்றுபவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்புகின்றனர். மாவட்டம் முழுவதும் 27 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.