'விடுதலைப் போரில் தமிழகம்' புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர்! - Freedom Fighters Photo Exhibition
🎬 Watch Now: Feature Video
இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்களை போற்றி சிறப்பிக்கும் வகையில் ' விடுதலைப் போரில் தமிழகம் ' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி வாழ்க்கை வரலாறு குறித்து அரசுப் பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியையும் தொடங்கி வைத்தார்.