'உஷார்..' உயரும் மேட்டூர் அணை;காவிரிக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - Flood warning issued for Cauvery
🎬 Watch Now: Feature Video

ஈரோடு: கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து அதன் முழு நீர் மட்ட உயரமான 120 அடியை மேட்டூர் அணை எட்டியது. இதனைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட காவிரிக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மாபேட்டை, நெருஞ்சிப்பேட்டை, பவானி, கருங்கல் பாளையம் காவிரிக்கரை, கொடுமுடி போன்ற பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 'தண்டோரா' மூலம் பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றில் குளிக்கவோ துணி துவைக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டது.