Video: கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றுக்குள் கவிழ்ந்தது - நூலிழையில் உயிர்தப்பிய நால்வர்! - வைரல் வீடியோ
🎬 Watch Now: Feature Video

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் நேற்று பயங்கர விபத்து ஒன்று நிகழ்ந்தது. பூச்சக்காடு என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த ஆல்டோ கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, கிணற்றுக்குள் பாய்ந்தது. எனினும் அதில் பயணம் செய்த ஆறு வயது சிறுவன் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். காயம அடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் கிணற்றுக்குள் முழ்கியதால், மீட்பு பணியில் சற்று சிரமம் ஏற்பட்டது. காசர்கோட்டின் உதுமா பகுதியைச் சேர்ந்த அப்துல் நசிர் என்பவர், நேற்று (மே 3) ரம்ஜான் கொண்டாட்டத்திற்காக அவரது தங்கை வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.