வீடியோ: 'என்னவென்று சொல்வதம்மா.. யானையின் பேரழகை' - வனத்துறை அலுவலர் பாடல் பாடி அசத்தல் - என்னவென்று சொல்வதம்மா
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: மத்திய சிறை வளாகத்தில் அரசு சார்பிலான 19 நாள் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று (ஜூலை 4) சினிமா பாடல் மெட்டுக்களுடன் யானை மற்றும் வனத்தின் பாதுகாப்பு குறித்து கோவை வனக்காப்பாளர் சோழ மன்னன் என்பவர் பாடிய பாடல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. நடிகர் பிரபு, நதியா, மீனா நடிப்பில் வெளியான ராஜகுமாரன் படத்தில் வரும் 'என்னவென்று சொல்வதம்மா.. வஞ்சி அவள் பேரழகை' என்ற பாடல் மெட்டை யானை குறித்த விழிப்புணர்வு பாடலாக பாடியது அங்கிருந்த அனைவரையும் வெகுவாக ஈர்த்தது.