பிடிமண் எடுத்த சங்கரநாராயணன் கோயில் யானை! - சங்கரன்கோவில் சங்கரநாராயணன் கோவிலின் யானை பிடிமண் எடுக்கும் விழா!
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14952449-thumbnail-3x2-yanai.jpg)
சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்தையொட்டி நேற்று (ஏப்.6)யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 6 கி.மீ.தொலைவில் உள்ள பெருக்கோட்டூர் கிராமத்திற்கு சென்று கோமதி யானை பிடிமண் எடுத்தது. அப்போது பக்தர்கள் வழிநெடுக நின்று தேங்காய்பழம் உடைத்து சுவாமி அம்பாளை வழிபட்டனர். இதன்பிறகு சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. இதனைக்காண சங்கரன்கோவிலைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST
TAGGED:
tenkasi sankrankovil