thumbnail

குதிரையாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு!

By

Published : May 22, 2021, 11:50 AM IST

திண்டுக்கல்: பழனி அருகே உள்ள குதிரையாறு அணையிலிருந்து வலது பிரதான கால்வாய் பாசனம், இடது பிரதான கால்வாய் பாசனம் மற்றும் பழைய நேரடி ஆயக்கட்டு பாசனம் ஆகியவற்றின் பாசன வசதிக்காக நேற்று(மே.21) தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முதல் 45 நாட்களுக்கு வினாடிக்கு 31கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும் என்றும், இதன்மூலம் திண்டுக்கல் பற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 4641.17 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும், திறந்துவிடப்படும் தண்ணீரை விவசாயிகள் தேவைக்கேற்ப சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.