நவராத்திரி விழா: தஞ்சை பெரிய கோயில் பெரியநாயகி அம்மனுக்கு சதஸ் அலங்காரம்! - thanjavur temple golu festival - THANJAVUR TEMPLE GOLU FESTIVAL
🎬 Watch Now: Feature Video
Published : Oct 6, 2024, 1:32 PM IST
தஞ்சாவூர்: நடப்பாண்டு நவராத்திரி விழா அக்டோபர் 3 ஆம் தேதி துவங்கி வரும் 13ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி கொலு கொண்டாடப்பட்டது. இதில், ஸ்ரீ பெரியநாயகி அம்மன் சதஸ் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நவராத்திரியின் மூன்றாம் நாள் அம்பிகை, அசுரர்களுக்கு எதிரான போரில் தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்த நாளாக கருதப்படுகிறது. இந்த நிலையில், நவராத்திரி மூன்றாம் நாளாக நேற்று பெரியநாயகி அம்மனுக்கு சதஸ் (மஹாராணி) அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது.
அதேபோல் தஞ்சையில் பிரசித்தி பெற்ற கோயில்களான கொங்கணேஸ்வரர் திருக்கோயிலில் துர்காம்பிகைக்கு தபஸ் அலங்காரமும், காளிகா பரமேஸ்வரி கோயிலில் அம்மனுக்கு படை திரட்டல் அலங்காரமும், எல்லையம்மன் திருக்கோயிலில் அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் அங்காளம்மன் கோயிலில் அம்மனுக்கு கருமாரியம்மன் அலங்காரமும் சியாமளாதேவி அம்மன் கோயிலில் அன்னபூரணி அலங்காரமும் சிறப்பாக செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.